சதொச விற்பனை நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று.

திருக்கோவில் சதோச விற்பனை நிலையத்தில் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பரநிருபசிங்கம் மோகனகாந்தன் தெரிவித்தார் .

திருக்கோவில் சதோச விற்பனை நிலையத்திற்கு சென்ற பொதுமக்களை தங்களை வீடுகளில் சுயதனிமை படுத்திக் கொண்டு தங்களது விபரங்களை திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கோ அல்லது தங்களது கிராம சேவகருக்கோ அறிவித்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

மேலும் தற்போது நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனால் தங்களது பிள்ளைகளையும் , தாங்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் .

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பயணத்தடை காலத்தில் வெளியில் நடமாடுவது தண்டனைக்குரிய குற்றமென்பதுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.