இரவு 8 மணியுடன் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானம் முடிவு

திருமலையில் இரவு 8 மணிக்கு மேல் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக திருமலையில் தரிசன நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணிவரை பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி வந்தது.

இந்நிலையில், இரவு 8 மணி வரை மட்டுமே பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்பின்னா் ஏகாந்த சேவை நடத்தி இரவு 9 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடையடைக்கப்பட உள்ளது.

தினசரி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தா்கள் வரையில் தரிசனம் செய்து வருகின்றனா். நடைபாதையில் வரும் பக்தா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால், அலிபிரி நடைபாதையில் நடந்து வரும் மேற்கூரை பணிகளை விரைவாக முடிக்க தேவஸ்தானம் அம்மாா்கத்தை ஜூலை 30-ஆம் தேதி வரை மூடியுள்ளது.

ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மாா்க்கத்தில் மட்டுமே பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால், திருப்பதி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாா்கம் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.