விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பொறுப்பதிகாரி பலி.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலம் கொண்டுச சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இன்று காலை 7.30 மணியளவிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்தை எடுத்துச் சென்ற உறவினர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த வாகனம் வழுக்கி வீதியை விட்டு விலகி பள்ளளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் ஹட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.