தனியார் வங்கிகள் இன்று முதல் சில தினங்களுக்கு பூட்டு.

தனியார் வங்கிகளுக்கு இன்று (07) முதல் பூட்டு

தனியார் வங்கிகள் இன்று (07) முதல் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தனியார் வங்கிகள் தமது சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதன்படி ,தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் பயணக் கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை வங்கிகள் எட்டியுள்ளதாக அறிய முடிகின்றது,

வாடிக்கையாளர்களின் வருகை குறைவு மற்றும் பணியாளர்களுக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்க முடியாமை ஆகிய விடயங்களை கருத்திற் கொண்டு, வங்கிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.

மேலும் ,தன்னியக்க இயந்திரங்கள், இலத்திரனியல் வங்கி சேவைகளை பயன்படுத்தி, வங்கி சேவைகளை நாளை முதல் முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.