தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிறு மெதிவ் சி.ஐ.டியினரால் கைது!

சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிறு மெதிவ், சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபரின் பெயரில் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டதைப் போன்று அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்பட்டிருக்கவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்படி போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் அவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சி.ஐ.டி. அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.