பாலத்தில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த மருத்துவ மாணவி – குடும்பத்தினர் அதிர்ச்சி

இந்தியா : இந்தூரில் செல்ஃபி மோகத்தில் எம்.பி.பி.எஸ் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவ மாணவர் நேஹா அர்சி. சிலிக்கான் சிட்டி பகுதியில் வசிந்த வந்த இவர் சாகர் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். நேஹா தினமும் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார். நேற்று நேஹா மற்றும் அவரது சகோதரர் இருவரும் நடைப்பயிற்சி சென்றுள்ளனர். அப்போது லேசான மழை பெய்துள்ளது. நேஹாவின் சகோதரர் அருகில் இருக்கும் கடைக்கு சென்று சிப்ஸ் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.

மழையின் காரணமாக க்ளைமேட் நன்றாக இருந்ததால் தன்னுடைய மொபைல் போனில் நேஹா புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார். பாலத்தின் மீதிருந்த சுவரில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நேஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேஹாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராஜேந்திரா நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய காவலர்கள், மருத்துவ மாணவி நேஹாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த சாட்சியத்தின்படி இது ஒரு விபத்து என தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.