நெடுந்தீவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மரணம்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாடகக் கலைஞரான காவலூர் செல்வம் என்று அறியப்படும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர் கனகசுந்தரம் ஜெயக்குமார் என்பவரே உயிரிழந்தார்.

இன்று (14) இலங்கை தமிழ் அரசு கட்சியினர் ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் ஜெயக்குமார் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Comments are closed.