சிவசங்கர் பாபா குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்..

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அங்கு படித்த முன்னாள் மாணவிகள் சிலர் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தனர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து விமானம் மூலம் அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சுஷில் ஹரி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்க கூடிய மாணவிகளை வைத்தே பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படிக்கக்கூடிய மாணவிகளை அழைத்து வரச்சொல்லி சிவசங்கர் பாபா அந்த மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாணவியருக்கு நடத்தும் ஓவிய போட்டிகளில் போது கூட உடல் உறுப்பு பகுதிகளை தெளிவாக மாணவிகளை வரையச் சொல்லி அதற்கு சிவசங்கர் பாபா சிறப்பு மதிப்பு பெண் வழங்கும் முறையை வழக்கமாக வைத்திருந்தது விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.