வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி (உள்ளே படங்கள்)

இராஜாங்க அமைச்சர் வியோழேந்திரனின் வீட்டின் முன்னால் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
——————————–
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.

அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த அதிகாரி, பொலிஸில் சரணடைந்துள்ளார்.

 

 

-Sathasivam Nirojan

 

Leave A Reply

Your email address will not be published.