கொரோனாவுக்கு பின்பு ரத்த சா்க்கரை அதிகரிப்பை குணப்படுத்தும் ஆயுா்வேத மருந்துகள்: நிபுணா்கள் தகவல்

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களது ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதை ஆயுா்வேத மருந்துகள் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களுக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அவா்களில் 14.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் (ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பது) ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

‘ஹைப்பா்கிளைசீமியா’ என்றழைக்கப்படும் அந்த நிலையை குணப்படுத்துவதற்குப் பல்வேறு மருந்துகள் காணப்பட்டாலும், ஆயுா்வேத மருந்துகள் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வறிக்கை ஒன்றில் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

‘பிஜிஆா்-34’ என்ற ஆயுா்வேத மருந்து, கொரோனாவுக்குப் பின்பு ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதைப் பெருமளவில் கட்டுப்படுத்துவதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். ஆயுா்வேத மருந்துகள் தொடா்பாக தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பிஜிஆா்-34 ஆயுா்வேத மருந்தில் தாருஹரித்ரா என்ற மூலிகை முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அதில் ரத்த சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் டிபிபி-4 என்ற மருந்துப் பொருள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுா்வேத மருந்து குறித்து தாவரவியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஏ.கே.எஸ்.ராவத் கூறுகையில், ‘பிஜிஆா்-34 மருந்தில் குத்மாா் என்ற மூலிகையில் இருந்து பெறப்பட்ட ஜிம்னெமிக் அமிலம் சோ்க்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள சா்க்க்ரை அளவைக் கட்டுப்படுத்தும் மேலும் பல மூலிகைகளும் இந்த மருந்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவா்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை ஆயுா்வேத மருந்துகள் மூலமும் குணப்படுத்த முடியும் என்பது இந்த ஆய்வில் மூலமாக உறுதியாகியுள்ளது‘ என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.