தகவல் தொடர்பாடல் நிகழ்நிலை காணொளி கலந்துரையாடல்.

இலங்கையின் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் (ICTA) ” Northern Roadshow for Regional Cluster Development” என்ற தொனிப்பொருளில் நிகழ்நிலை காணொளி கலந்துரையாடல் இன்று (26) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் G2G தொடர்பை வலுப்படுத்தலும் சமூகமும், பங்குதாரர்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றிற்கிடையே காணப்படும் தேவைகளை பிராந்தியரீதியாக இனங்காணலும் தொடர்பாக தேசிய ரீதியில் நிகழ்நிலை காணொளி கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும் இவ் நிகழ்நிலை கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் சார்பாக, மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் அரச திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் துறைசார் அலுவலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.