சிறுநீரக நோயாளர்கள் மற்றும் காச நோயாளர்களிற்கான கொரணா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்.

யாழ் மாவட்டத்தில் உள்ள நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்
சிறு நீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நோயளர்களிற்கான கோவிட் 19 எதிரான தடுப்பூசி இன்று சனிக்கிழமை யாழ் போதனா
வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் வழங்கப்படும்.

இவர்கள் தாம் சிகிச்சை பெறும் சிகிச்சை நியைத்திற்கான பதிவு (கிளினிக் கொப்பி,நோய் நிர்ணய அட்டை) மற்றும் உரிய ஆவணங்களுடன் தமக்கு அருகில் உள்ள மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றுக்கு சென்று இவ் தடுப்பூசிகளினை பெற்றுக் கொள்ளமுடியும்.

மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்காக ; சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் யாழ்ப்பாணம் காசநோய் சிகிச்சை நிலையத்திற்கு இன்று 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை சென்று தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்;
வடமாகாணம்.

Leave A Reply

Your email address will not be published.