உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறதா? 3 மாதங்களுக்கு சவாலை எதிர்கொள்ள வேலைத்திட்டம் ஆரம்பம் என்கிறது அரசு.

இலங்கையில் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு கையிருப்பில் இருக்கின்றது என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எனினும், அதனைத் தொடர்ந்தும் பேணிச் செல்வது சவாலாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில், நாட்டின் உணவுக் கையிருப்பு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உணவுக் கையிருப்பு தொடர்பாகக் கூறப்படும் விடயங்களில் ஒரு பகுதி சரியாக இருந்தாலும், அமைச்சரவை தொடர்ந்தும் அதுதொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றது.

நாட்டின் பிரதான வருமான வழிகள் தடைப்பட்டுள்ள நிலையிலும் அரசு உணவுக் கையிருப்பை நிர்வகிக்க முயற்சிக்கின்றது.

அரசு இன்னும் ஒரு மாதத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை செலுத்த வேண்டியுள்ள நிலையிலும், உணவுக் கையிருப்பு தொடர்பான சவாலைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.