மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் கட்ட சினோபாம் தடுப்பூசி!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (29) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கொவிட் தடுப்பூசியினை மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் அவர்களுக்கு ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் சினோபாம் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இக்கால கட்டத்தில் மக்களுக்கான சேவையினை தங்கு தடையின்றி வழங்க வேண்டுமென்பதற்காக மக்கள் மத்தியில் கடமையாற்றிவரும் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் கிளைத் தலைவர்களுக்கு இத் தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தது.

இவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசியானது கடந்த மாதம் (25) ஆந் திகதி ஏற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.