மைக்ரோசாப்ட் பிழையை கண்டுப்பிடித்த இந்திய பெண்- கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

மைக்ரோசாப்ட்-இல் இருக்கும் பிழையை கண்டுபிடித்து தெரிவித்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை வழங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியை சேர்ந்த அதிதீ சிங்(20) வயது பெண் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து, இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் இவரை பணியில் சேர்த்து கொண்டது.

மேலும், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். அதற்கு பேஸ்புக் நிறுவனம் இவருக்கு ரூ.5.5 லட்சம் பரிசு அறிவித்து வழங்கியது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதனைத்தொடர்ந்து, தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிழையை கண்டுபிடித்துள்ளார். அந்நிறுவனத்தில் இருக்கும் ஆர்.இ.சி. என்ற தொலைக்குறியீடு செயல்படுத்துதல் பிரிவின் பிழையை கண்டறிந்து அதனை அந்நிறுவனத்திடம் கொண்டுப்போய் சேர்த்துள்ளார்.

எவருமே கண்டுபிடிக்காத அந்த பிழையை கண்டுபிடித்து கூறியதால், அவரை பாராட்டும் விதமாக முப்பதாயிரம் டாலர் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சம் ஆகும். இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.