ஆன்லைன் வகுப்புகள் வெற்றியா?- இந்தியாவில் 22% பள்ளிகளில்தான் இண்டெர்நெட் வசதி- ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் முதலாம் அலை இரண்டாம் அலை என்று அலைகள் ஓய்வதில்லையாக பரவ பெரிய அளவில் பாதிக்கப்பட்ட துறை கல்விதான். பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்தன. ஆனால் இந்தியாவில் 22% பள்ளிகளில் மட்டுமே இண்டெர்நெட் வசதி இருந்ததாக கல்வியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அரசுப் பள்ளிகளின் நிலை கேட்கவே வேண்டாம் 12%க்கும் குறைவான அரசுப் பள்ளிகளில்தான் இண்டெர்நெட் வசதி இருந்தது. இதனால் பெரிதும் விதந்தோதப்பட்ட ‘டிஜிட்டல் கல்வி’ அடி வாங்கியது. ஆனால் ஆன்லைன் வகுப்புகள் வெற்றி என்று கல்வித்துறை வட்டாரங்களில் கொண்டாடப்பட்டது.

இது தொடர்பாக கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) தகவல் திரட்டியது. அதில் நாட்டில் உள்ள 15 லட்சம் பள்ளிகளிலிருந்து தரவுகளைச் சேகரித்தது.

ஆனலைன் வகுப்புகள் போன்ற டிஜிட்டல் கல்வி முறை பெரும்பாலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பைப் பொறுத்ததே. பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து காலியான வகுப்பறைகளில் கணினித்திரைக்கு முன்னால் பாடங்களை நடத்தினர். ஆனால் இந்தியாவின் டிஜிட்டல் பிளவு, டிஜிட்டல் இடைவெளி இந்த ஆன்லைன் வகுப்புகள் விவகாரத்தில் அம்பலமானது. கேரளா மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் 90% பள்ளிகளில் இண்டெர்நெட் இணைப்பு உள்ளது.

சத்தீஸ்கர் (83%), ஜார்கண்ட் (73%) ஆகிய மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் கணினிகளை நிர்மாணித்தது பயனளித்தன. தமிழ்நாடு (77%), குஜராத் (74%), மகாராஷ்டிரா (71%), ஆகிய மாநிலங்களில் தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளை விட கணினி வசதிகள் உள்ளன.

ஆனால் அசாம் (13%), ம.பி. (13%), பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 14%, திரிபுரா 15%, உ.பி. 18% ஆகிய மாநிலங்களில் 5 பள்ளிகளுக்கு ஒரு பள்ளி என்ற விகிதத்தில் கூட கணினிகள் இல்லை. அரசுப்பள்ளிகளில் இன்னும் நிலைமை மிக மோசம்.

இண்டெர்னெட் இணைப்பு விஷயத்தில் இன்னும் மோசம், கேரளா 88%, டெல்லி 86%, குஜராத் 71% ஆகிய மாநிலங்கள் மட்டுமே பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இண்டெர்னெட் வசதி உள்ளது.

ஆனால் பள்ளிகள் திறந்தால் கோவிட்-19 பாதுகாப்பு விஷயங்களில், அதாவது ஹேண்ட் சானிட்டைஸர் விவகாரத்தில் 90% பள்ளிகள் கச்சிதமாக உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.