திருச்சியில் கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு 50 இடங்களில் முகாம்..

கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொது மக்களிடத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஆனால், போதிய கையிருப்பு இல்லாமல், சில நாட்களாக தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. பல்வேறு இடங்களில் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

அதேநேரத்தில் திருச்சி மாவட்டம், மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது வரை 4.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பற்றாக்குறையினால் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 8 முகாமிலும், நேற்று தலா 400 தடுப்பூசிகள் வீதம் வழங்கப்பட்டது. இன்றைய தினம் நடைபெறும் முகாம்களில் தலா 600 என்ற அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் 14 ஒன்றியங்களில் 42 ஊரகப் பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஊரகப் பகுதிகளுக்கு மொத்தம் 13, 100, மாநகராட்சிப் பகுதிகளுக்கு மொத்தம் 4, 800 தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கே முகாம் தொடங்கினாலும் 7 மணிக்கே வருகை தந்து, டோக்கன் பெற்றுச் சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும், கோவிஷீல்டு தடுப்பூசியே அதிகம் வழங்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக் கொண்ட பின்னர் 84வது நாள்களுக்கு பிறகு 2வதுசெலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 90 நாட்களுக்குப் பிறகே இதற்கான இணையதளத்தில் ஏற்கப்படுகிறது. ஆகையால் 90 நாட்களுக்குள் 2வது தவணைக்கு வந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாமல் திரும்பினர். ஆனால் அரசு மருத்துவர்கள் இதை மறுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.