மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு!

மட்டக்களப்பு – கரடியனாறு, குடாவெட்டை வயற் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றவர், மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதன்போது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் குடாவெட்டை காட்டுப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.