அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலின் முக்கிய ஹாட் ஸ்பாட்டாக சிட்னி மாறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

2.25 கோடி மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில், இதுவரை 10,505 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 111 பேர் பலியாகி உள்ளனர். 7,928 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், 2,466 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், சிட்னி அந்நாட்டின் கொரோனா பரவலின் புதிய ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளதாக ஆஸி., அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நியூ சவுல்த் வேல்ஸ் மாகாண அரசு கூறுகையில், மெல்போர்னை தொடர்ந்து தற்போது சிட்னியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் புதிய ஹாட் ஸ்பாட்டாக சிட்னி உருவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இதுவரை 3,517 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 49 பேர் பலியாகியுள்ளனர். 2,988 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது அங்கு கொரோனா அதிகரித்து வருவதால், இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாகாண அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்துடனான எல்லை திறக்கும் முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.