9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை பெற்ற இங்கிலாந்து.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஃபாகர் சமான் 47 ரன்களும் சதாப் கான் 30 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சகிப் முகமது 4 விக்கெட்டுகளையும் கிரேக் ஒவர்டான், பார்க்கின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட்- டேவிட் மலான் களமிறங்கினர். பிலிப் சால்ட் 7 ரன்கள் இருந்த நிலையில் அப்ரிடி பந்து விச்சில் வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ஜாக் கிராலி-டேவிட் மலான் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இங்கிலாந்து அணி 21.5 ஓவரில் 142 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மலான் 68 ரன்னிலும் ஜாக் கிராலி 58 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது

Leave A Reply

Your email address will not be published.