இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா.

இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி சமீபத்தில் நிறைவடைந்த இலங்கை-இங்கிலாந்து தொடரிலும் இவர் இலங்கை அணியுடன் இங்கிலாந்துக்கு சென்றிருந்தார்.
இதுவரையில் இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மற்றும் 4 அலுவலக அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ,இங்கிலாந்து- இலங்கை இரண்டாவது ஒருநாள் தொடருக்கு பின்னர் இரு அணி வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றுகூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.