தரம்சாலாவில் நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து !

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது. . பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்படலாம் என்று கவல் வெளியானது.
இந்நிலையில், தரம்சாலாவில் இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை நடத்த பிசிசிஐக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் மே 11ம் தேதி தரம்சாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.