ஜூலை 21ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்!- கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு.

எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) கொண்டாடப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்பன அறிவித்துள்ளன.

இஸ்லாமிய நாட்காட்டியின் 12 ஆவது மாதமான துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை காணும் மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டின் துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை இலங்கையின் எப்பகுதியிலும் தென்படாததன் காரணமாக, துல்கஃதா மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்வதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை (12) துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாளாகக் கொள்ளப்படும் என்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.