ஆற்றில் மிதந்து வந்த 10 அடி பாம்பு: அலறியடித்து ஓடிய மக்கள்! இளைஞர் செய்த தரமான செயல்

ஆற்றில் அடித்து வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை இளைஞர் ஒருவர் லாவகமாக பிடித்து வெளியே கொண்டுவந்ததால் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

குலசேகரம் பகுதியில் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் செல்வதற்கான கால்வாய் அமைந்துள்ளது.

இந்த கால்வாயில் பொதுமக்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வந்து கொண்டிருந்தது. பாம்பைக் கண்டதும் அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறியடித்து ஓடியுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இருப்பினும், தூரமாய் நின்று பாம்பை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கி, சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு, பாம்பை பிடித்து வெளியே கொண்டு வந்துள்ளார்.

தைரியமாக கால்வாயில் இறங்கி மலைப்பாம்பை பிடித்த அந்த இளைஞரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வரும் நிலையில், குறித்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.