பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி.

லண்டனில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. (மழை காரணமாக ஆட்டம் 47 ஒவர்களாக குறைக்கப்பட்டது) அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 60 ரன்களும், வின்ஸ் 56 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் ஹசன் அலில் 5 விக்கெட்டுகளும், ஹரிஸ் ரவு 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 41 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் சார்பில் ஷகில் 56 ரன்களும், ஹசன் அலி 31 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிகோரி 3 விக்கெட்டுகளும், ஒவர்டோன், பர்கின்சன் மற்றும் மெக்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

Leave A Reply

Your email address will not be published.