பூக்களைப் பறிப்பதற்காகச் சென்றவர் சடலமாக மீட்பு!

விகாரைக்கு கொண்டுச் செல்வதற்காகப் பூக்களைப் பறித்து வருவதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் வெலிகம, கடற்கரையில் இன்று கரையொதுங்கியுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 57 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

குறித்த நபர் மேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், அவர் வீடு திரும்பாததால் அவரைத் தேடும் பணியில் உறவினர்களும் பிரதேச மக்களும் இணைந்து ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தினமும் விகாரைக்குப் பூக்களை வழங்கி வருபவர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.