பாகிஸ்தான் அணியுடனான டி.20 தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிப்பு.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில், ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில், டி.20 தொடரின் முதல் போட்டி ஜூலை 16ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில், டி.20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கொரோனா கட்டுப்பாட்டால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடாத இயன் மோர்கன் உள்பட இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
டி.20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இயன் மோர்கன், மொய்ன் அலி, ஜானி பாரிஸ்டோ, டாம் பாண்டன், ஜாஸ் பட்லர், டாம் கர்ரான் போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். அதே போல் ஒருநாள் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லீவிஸ், ஜேக் பால், ஷாகிப் மஹ்மூத் மற்றும் மேட் பார்கின்சன் போன்ற இளம் வீரர்களுக்கும் டி.20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே வேளையில், இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய அணியை வைத்தே பாகிஸ்தானை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸிற்கு டி.20 தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோக்ஸுடன் சேர்த்து சாம் கர்ரான், மார்க் வுட், கிரிஸ் வோக்ஸ் போன்ற வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியாளரான கிரிஸ் சில்வர்வுட்டிற்கும் ஓய்வு வழங்கப்பட்டு, பவுல் காலிங்வுட் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.