சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்புடன் அமெரிக்கத் தூதுவர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய பேச்சு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அத்துடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் பங்கேற்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.