புதுச்சேரியில் திடீரென 100 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல்: அச்சமடைந்த பொதுமக்கள்

2004 ம் ஆண்டு சுனாமி தாக்குதல் காரணமாக கடல் மீது மக்களுக்கு இருந்த காதல் அச்சமாகவே மாறி விட்டது. அடிக்கடி கடல் நீர் உள் வாங்கும் போது சுனாமி வருமோ என அச்சம் எழுகிறது மக்கள் மனதில். இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கத்திற்கு மாறாக புதுச்சேரி கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 100 அடி தூரம் வரை கடல் திடீரென பின்வாங்கியது.

காந்தி சிலை பின்புறம் முதல் துறைமுகம் வரை உள்ள பகுதி வரை உள்வாங்கி காணப்பட்டது. இதனால் மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டது. கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுனாமிக்கான அறிகுறியோ என பீதி அடைந்தனர். மாலை 4 மணி வரை இந்த நிலை நீடித்தது. மாலை 4 மணிக்கு மேல் கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், இயற்கைக்கு மாறாக கடலில் நடந்துள்ளதை கடல் உள்வாங்கியது சுட்டிக்காட்டுகிறது. ஆழ்கடலில் அடுக்குகள் நகர்ந்து கடல் உள்வாங்கி இருக்கலாம். கடல் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு அதன் காரணமாகவும் கடல் இருக்கலாம். அதற்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.