ரிஷாட் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் : விஞ்ஞான ரீதியிலான விசாரணைகளுக்கு உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக பொலிஸார் பலரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

சிறுமியின் தாய், பாராளுமன்ற உறுப்பினர ரிஷாட் பதியுதீனின் மனைவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோரிடம் சம்பவம் தொடர்பாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொரளை பொலிஸார் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் அலுவலகத்துடன் இணைந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசேடமாக இந்த சிறுமியை அழைத்து வந்த நபரிடம் தொடர்ந்தும் வாக்கு மூலம் பெறப்படுகின்றது. இந்த சிறுமி டயகம பிரதேசத்தில் இருந்து கடந்த வருடம் அழைத்துவரப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர ரிஷாட் பதியுதீனின் மனைவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோரிடம் மேலதிக வாக்கு மூலம் நேற்று பெறப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையில் சிறுமி தொடர்பில் பாலியியல் பிரவேசம் (துஷ்பிரயோகம்) இடம்பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக விசேடமாக விஞ்ஞான ரீதியிலான சாட்சியங்களை கண்டறிந்து ஆய்வுகளை மேற்கொண்டு விசாரணைகள் நடத்தப்படவுள்ளன என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.