சரிபாதி கொரோனா மரணங்களை கணக்கில் காட்டாத இந்திய மாநிலம்! அதிர்ச்சி தகவல்

இந்திய மாநிலம் இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் சரிபாதி மரணங்கள் கணக்கிடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் இமாச்சலில் ஏப்ரல் 2020 முதல் 2021 மே மாதம் வரை 3,127 கொரோனா மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், இதேகாலகட்டத்தில் 6,081 இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது ஆன்லைன் தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இமாச்சலப்பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசு சரிபாதி மரணங்களை கணக்கில் காட்டவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதுகுறித்து செய்திகள் பல்வேறு நாளிதழ்களில் வெளியானதை அடுத்து, நேற்று விளக்கமளித்த சிம்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை அல்லாத இடங்களில் ஏற்பட்ட மரணங்களே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

வீடுகளிலும் தனியார் மருத்துவமையங்களிலும் ஏற்படும் மரணங்கள் அரசின் பதிவேடுகளில் இருந்து விடுபட்டிருக்கலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மரணங்கள் குறித்த தகவல்களை மாநில அரசுகளே தருவதால் கொரோனா பலி எண்ணிக்கையை மறைக்க வாய்ப்புகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நேற்று விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா அரசு ஆட்சி செய்யும் இமாச்சல பிரதேசத்திலேயே சரிபாதி கொரோனா மரணங்கள் கணக்கில் காட்டப்படாதது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.