சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க உதவிய ஆசிரியைகள் யார்? 3 பெண்கள் சிபிசிஐடியிடம் நேரில் ஆஜராகி விளக்கம்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில் மற்ற 2 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

மாணவிகள் கொடுத்த பாலியல் தொல்லை புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்திருந்தனர்.

மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையிலேயே இந்த முடிவை அவர்கள் எடுத்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதன்படி சமீபத்தில் சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்றபோது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் 5 பேரும் தப்பி ஓடினர். ஆசிரியை காயத்ரி, பிரவீனா உள்ளிட்ட ஆசிரியைகளே தலைமறைவானார்கள்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

மற்ற 2 ஆசிரியைகள் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.