இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி துவங்க உள்ள நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜானி பாரிஸ்டோ, சாம் கர்ரான் போன்ற வீரர்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய ட்வீட்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த ஒலி ராபிசன் முதல் இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதே வேளையில் கிரிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் பெயர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை.
இதுதவிர ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஓலி போப், டாம் சிப்லே ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி;
ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பாரிஸ்டோ, டாம் டேஸ், ஸ்டூவர் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் க்ராவ்லே, சாம் கர்ரான், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஓலி போப், ஓலி ராபின்சன், டாம் சிப்லே, பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட்

Leave A Reply

Your email address will not be published.