யாழ். மாவட்டத்தில் கொரோனாவால் ஒரே நாளில் ஐவர் மரணம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் கொரோனா அறிக்கையிடல் பிரிவினரால் நேற்றிரவு வெளியிடப்பட்ட நாளாந்த மாவட்ட கொரோனா நிலவர அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜூலை மாதத்தின் 21 நாட்களில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதையடுத்து யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்தத் தொகை 117 ஆக உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 35 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 14 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 10 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 10 பேரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 09 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 08 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 06 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 04 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 03 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 03 பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 02 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.