இலங்கையில் 4,000ஐக் கடந்தது கொரோனா மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனாத் தொற்றால் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நேற்று உயிரிழந்த 43 பேரில் 17 பெண்களும், 26 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.