இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை ஜெனிவாவில் சமர்ப்பிக்க ஐந்து நாடுகள் தயார்.

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தயாராகி வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன், மசிடோனியா, கனடா, ஜேர்மனி மற்றும் மொண்டினீக்ரோ ஆகியவை இணைந்து கூட்டாக இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 8 ஆம் திகதி வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது. இதன்போதே இந்தப் புதிய பிரேரணையைக் கொண்டுவருவதற்கு ஐந்து நாடுகள் திட்டமிட்டுள்ளன என தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சீனா சமர்ப்பித்த பிரிட்டிஷ் எதிர்ப்பு தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தமையே இந்தப் புதிய பிரேரணையைம் கொண்டுவருவதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.