பாலியல் இணையத்தளங்களை தடை செய்ய உத்தரவு.

இலங்கைக்குள் செயற்படுகின்ற அனைத்து பாலியல் ரீதியிலான இணையத்தளங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோஷனி அபேவிக்ரம இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி ,பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல், இவ்வாறான இணையத்தளங்களுக்கான பெயர்களை பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் சேவை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ,கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயதான சிறுமியை, இணைய வழியாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்ற போதே, கொழும்பு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.