முத்தலாக் தடை சட்டம்: இஸ்லாமிய பெண்கள் உரிமை தினமாக இன்று அனுசரிப்பு!

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டாம் ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் இன்றைய தினம் ‘ இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம்’ என்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு மாற்றான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து முத்தலாக்கிற்கு எதிரான புதிய சட்டம் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.
இதையும் படிங்க: இளைஞரை கடத்தி கத்திமுனையில் திருமணம் செய்த 50 வயது பெண்!

இந்நிலையில், இந்த சட்டம் அமலுக்கு வந்த இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் இஸ்லாமிய பெண்கள் உரிமை நாளாக கடைபிடிக்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் அமைச்சகம் அறிவித்தது. இது தொடர்பாக மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், “ . இந்த சட்டம் இயற்றப்பட்டபின் இஸ்லாமிய சமூகத்தில் முத்தலாக் கூறி பெண்களை சிறுமைப்படுத்துவது, அதுதொடர்பான வழக்குகள் குறைந்துவிட்டன. நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமிய பெண்களில் பெரும்பாலானோர் இந்தச் சட்டத்துக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
மேலும் படிக்க: கோழிக்கறி, ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சியை அதிகமாக சாப்பிடுங்கள்: பாஜக அமைச்சர் பேச்சு!

ஆகஸ்ட்1ம் தேதியை இஸ்லாமிய பெண்கள் உரிமை நாளாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ளஇஸ்லாமிய பெண்களின் சுயச்சார்பு, சுயமரியாதை, தன்னம்பிக்கையை மத்திய அரசு இஸ்லாமிய தடைச்சட்டத்தின் மூலம் வலுப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் இன்றைய தினம் இஸ்லாமிய பெண்கள் உரிமை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.