ரிஷாட் பதியூதீனின் வீட்டில் , பணிபுரிந்த 11 பெண்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்

2010 ஆம் ஆண்டு முதல் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 11 யுவதிகளில் மூன்று பேர் இறந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த டிஐஜி அஜித் ரோஹண தெரிவித்தார்.

போலீஸ் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி,  இசாலினி தீயில் எரியுண்டும், மற்றொரு யுவதி நோய்வாய்ப்பட்டும் இறந்துள்ளனர்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த டயகம பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை களனி பகுதியில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த யுவதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், குறித்த யுவதியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி, விசாரணை நடத்தும் பொலிஸ் குழு, குறித்த யுவதியை, பெளத்தாலோக்க மாவத்தையிலுள்ள ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு விசாரணைகளை நடத்தியுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர், மூத்த டிஐஜி அஜித் ரோஹன , பதியுதீனின் வேலைக்காரியாக இருந்து வீட்டை விட்டு வெளியேறிய மற்றொரு பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.