சூடாக்கப்பட்ட பால் பாத்திரத்தில் விழுந்து மூன்று வயது பெண் குழந்தை மரணம்!

சூடாக்கப்பட்ட பால் பாத்திரத்தில் விழுந்து எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை 13 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.

மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.ஓனாரா ஹிமியங்கி என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

பாட்டியின் பராமரிப்பில் குறித்த சிறுமி வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் உணவுப் பண்டம் தயாரிப்பதற்காகப் பெரிய பாத்திரமொன்றில் பால் சூடாக்கப்பட்ட வேளை, விளையாடிக்கொண்டிருந்த குழந்தை குறித்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையிலேயே, குறித்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.