இந்திய கிரிக்கெட் அணி அபாரம்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. நாட்டிங்காமில் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதல் பாதி முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2வது செசனில் தொடக்க வீரர் சிப்ளியை 18 ரன்னில் வீழ்த்தி, தனது விக்கெட் கணக்கை தொடங்கினார் ஷமி. அதன்பின்னர் பேர்ஸ்டோவை 29 ரன்னிலும், லாரன்ஸை ரன்னே அடிக்கவிடாமலும் வீழ்த்திய ஷமி தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரை சரித்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அரைசதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை 64 ரன்களுக்கு வீழ்த்திய ஷர்துல் தாகூர், ஆலி ராபின்சனை டக் அவுட்டாக்கி அனுப்பினார். இதையடுத்து கடைசி 2 வீரர்களான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகிய இருவரையும் பும்ரா ஒற்றை இலக்கத்தில் வீழ்த்த, முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை 21 ஒட்டங்களுக்கு எவ்வித விக்கெட் இழப்பின்றி முதல் நாளை நிறைவு செய்தது.

Leave A Reply

Your email address will not be published.