பாடப் புத்தகத்தில், 2019 ஆம் ஆண்டே தலைவர்கள் பெயரில் சாதிய பெயர் நீக்கப்பட்டது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஆங்கில நாளேட்டில் பாடப்புத்தகத்தில் தலைவர்களின் சாதிப்பெயர்கள் நீக்கம் என்ற செய்தியில் உரைநடை பகுதியில் உ.வே.சா. எழுதியுள்ள “பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் உ.வே. சாமிநாதர் என்று அச்சிடப்பட்டுள்ளது என்று செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடப்புத்தகம் கடந்த ஆட்சிக்காலத்தில் திரு.உதயசந்திரன் ஐஏஎஸ், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்தபோது பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

14 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படாமல் இருந்ததை 2019 ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு பாடப்புத்தககங்கள் அச்சிடபட்டது. அப்போதைய மாற்றத்தின்போதே சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டது. குறிப்பாக உ.வே.சாமிநாதஐயர் ராபி.சேதுபிள்ளை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை பசுபொன் முத்துராமலிங்கம் தேவர் போன்று பெயர்களின் பின்னால் இருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டது என்பது உண்மை.

தற்போது பாடத்திட்டத்தில் எவ்விதமாற்றமும் கொண்டுவரப்படவில்லை. ஆனால் தற்போது அரசு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மாற்றம் கொண்டுவந்தது போல் சித்தரித்து முகநூல் பக்கங்களில் சாதிபிரச்சினை மேலோங்கி வருவது வருத்தத்திற்குரியது. ஆங்கில நாளேட்டில் தவறுதலாக வந்த பழையசெய்தி தற்போது சர்ச்சயினை கிளப்பியிருப்பது வேதனைக்குரியது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டப் பாடத்திட்டம் அடிப்படையிலேயே அச்சிடப்பட்ட புத்தகங்களே நடைமுறையில் உள்ளது என்பதை தகவலுக்காகத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.