பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலை.

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.

இதன்படி, மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கண்டி நகர், பேராதனை உள்ளிட்ட பல பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.