முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 276 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்தியா 18.4 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது.

பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். ஆனால் கே.எல். ராகுல் நிதானமாக விளையாடினார். அணியின் ஸ்கோர் 126 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது.

அடுத்து இறங்கிய புஜாரா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடினார்.

மறுமுனையில் நின்று ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். 3வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் – விராட் கோலி ஜோடி 117 ரன்களை சேர்த்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 276 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 2 விக்கெட், ராபின்சன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.