ஏழைகளின் நிலை கண்டு , அதிகாரிகளை கடிந்து கொண்ட பிள்ளையான்

கடந்த வியாழனன்று  மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ காஞ்சன விஜேசேகர  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவருடன் இணைந்து மாவட்டத்திலுள்ள வாகரை, பனிச்சங்கேணி, கொக்கட்டிச்சோலை, கிரான்குளம் உள்ளிட்ட இடங்களுக்கான கள விஜயத்தினை மாவட்ட அபிவிருத்திக் குழு  தலைவர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.

நீரியல்சார் வளங்களை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், புதிய துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகள் போன்றவற்றினை அமைத்தல்  என்பன தொடர்பாக  இவ்வேளையில் ஆராயப்பட்டது. 

 

இதன்போதே பிள்ளையானது மாகாணசபை ஆட்சிக்காலத்தில் பிரதேச பொதுமக்களுக்கென பிரித்துக்கொடுக்கப்பட்ட ‘வட்டவான் இறால்வளர்ப்புத் திட்டம்’ தற்போது பெருமுதலாளிகளின் சொந்தமாகியிருப்பதையிட்டு அதிருப்தி தெரிவித்ததோடு கடந்த நல்லாட்சி அரசில் தனது மக்கள் நலத்திட்டங்கள் பண முதலைகளுக்கு தாரைவார்க்கப்பட்டமைக்கு யார் காரணம் என அதிகாரிகளை கடிந்து கொண்டார். அவற்றை ஏழைகளுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அவர்  சிறையிலிருந்த காலத்தில் நடந்த மேற்படி சம்பவங்கள் பற்றி  அவரது சிறைக் குறிப்புகளுடன் வெளியான நூலில்  அவர் ஆதங்கப்பட்டு எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.