யாழ். – கே.கே.எஸ். வீதி கடையில் தீ!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வியாபார நிலையத்தில் இன்று ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குறித்த கடையில் தீ பரவல் ஏற்பட்டது.

கடையில் காணப்பட்ட பல இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அவ்விடத்துக்கு விரைந்து வேகமாகச் செய்யப்பட்டதன் காரணமாக பாரிய தீ விபத்து தடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.