டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் பாராலிம்பிக் போட்டிகள் 2020 டோக்கியோவில் வரும் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி செப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். அதற்கு அடுத்து 1960-இல் 23 நாடுகளில் இருந்து 400-க்கு மேற்பட்டோா் பங்கேற்றனா். இதன் தொடா்ச்சியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 100 நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கோனா் பங்கேற்றனா்.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல்பாதிப்புக்கு ஏற்ப அவா்கள் விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. டோக்கியோவில் ஏற்கெனவே 1964-இல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. புதிதாக தற்போது பாட்மிண்டன், டேக்வாண்டோ போன்றவை சோ்க்கப்பட்டுள்ளன.

22 விளையாட்டுகள்:

வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 போ் கால்பந்து, கோல்பால், ஜூடோ, பாராகனோ, பவா்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சோ் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடக்க உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.