தடுப்பூசி போடுவது மேலும் தாமதமானால் அது அழிவிற்கு வழிவகுக்கும் : டாக்டர் சமித கினிகே.

இலங்கையில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களில் 91% தடுப்பூசி போடாதவர்களுக்கே ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவது மேலும் தாமதமானால் அது அழிவிற்கு வழிவகுக்கும் என தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித கினிகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் கூறியதாவது,

60 வயதிற்கு மேற்பட்ட குறுகிய தரப்பினர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமையினால் பிரச்சனை என்பதால், நாட்டின் பல பகுதிகளில் தனி தடுப்பூசி மையங்களை அமைத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்படுகின்றது.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவில் தடுப்பூசி போடுவது முக்கியம்.

தடுப்பூசி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று இறப்புகளைக் குறைப்பதற்கும் நோய்கள் பரவுவதைக் குறைப்பதற்கும் ஆகும்.

கோவிட் இறப்புகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே 77% ஏற்பட்டுள்ளது.

30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 22%.

கோவிட் மரணத்திற்கு அதிக ஆபத்து உள்ளதால் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.