இன்றைய பஞ்சாங்கம் 25.08.2021 இன்றைய ராசிபலன்

சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:21
சந்திர உதயாதி நாழிகை: 20:38
சந்திர அஸ்தமன நாழிகை : 08:15
ஷகா சம்வத் : 1943 பிலவ
Lunar Month : ஆவணி 9
பட்சம் : கிருஷ்ண பக்ஷம்
திதி : திரிதியை – 16:18 வரை
நட்சத்திரத்தன்று : உத்திரட்டாதி – 20:48 வரை
யோகம் : சூலம் – 29:25 வரை
முதல் கர்ணன் : பத்திரை – 16:18 வரை
இரண்டாவது கர்ணன் : பவம் – 28:40 வரை
சூரிய அடையாளம் : சிம்மம்
சந்திரன் அடையாளம் : மீனம்
அபிஜித் : இல்லை
துர்முஹுர்த்தம் : 11:46 – 12:36
அமிர்தகாலம் : 15:48 – 17:28
ராகுகாலம் : 12:11 – 13:43
குளிகை : 10:38 – 12:11
யமகண்டம் : 07:33 – 09:06
சந்திராஷ்டமம்
மகம்+பூரம்

💐மேஷம்
மேஷம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். கவனம் தேவைப்படும் நாள்.
💐ரிஷபம்
ரிஷபம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.
💐மிதுனம்
மிதுனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.
💐கடகம்
கடகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தள்ளிப்போன விஷயங்கள் எல்லாம் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். உற்சாகமான நாள்.
💐சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உடல்நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
💐கன்னி
கன்னி: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள் உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
💐துலாம்
துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சிலமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
💐விருச்சிகம்
விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு, நனவாகும் நாள்.
💐தனுசு
தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
💐மகரம்
மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரங்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும்.தைரியம் கூடும் நாள்.
💐கும்பம்
கும்பம்: குடும்பத்தில் நல்ல அமைதியான மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
💐மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்த வேண்டாம். கோபப்படாமல் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். கவனம் தேவைப்படும் நாள்

Leave A Reply

Your email address will not be published.