உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை

அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்பாத உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இதயவியல், நரம்பியல், சிறுநீரகம் உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் படிப்பை முடித்த பின்னர், 2 ஆண்டு காலம், அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 2020 மற்றுமம் 21ஆம் ஆண்டில் இந்த படிப்புகளை முடித்த மாணவர்களுக்கான பணி கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. கலந்தாய்வின்போது பெரும்பாலான மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லை என கூறியுள்ளனர்.

இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்காத மாணவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவர்களிடம் இருந்து தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டுமென்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.